"காலைல சீக்கரம் எந்திரிக்கனும்! விடிஞ்சா சொர்க்க வாசல் சீக்கரம் தூங்குடா" அதட்டினார் அப்பா
'இந்த ஆளுக்கு இதே வேலைதான். பையன நல்லா கவனிக்க வேண்டிய வயசுல இப்படி திட்டிகிட்டு......" அம்மாவின் அதே முணுமுணுப்பு
அசதியாய் நிலாவை பார்த்துக்கொண்டு தூங்கினான் ஏழு வயது ராமரு.
காலை 4 மணி. "டேய் ராமரு! எந்திரு எந்திரு! கோயில கூட்டம் வந்துரும்" அதே அதட்டல் அப்பாவிடமிருந்து....
கண்ணை கசக்கிக்கொண்டு இருந்த ராமரின் மூஞ்சை கழுவி நெற்றியில் நாமத்தை இட்டு பாதி வேட்டியை கட்டி விட்டு விறு விறு என கூட்டி போனார் அப்பா. அவருடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் ஓடினான் ராமர்.
கோயில் வாசலை அடைய 4:10 ஆகி விட்டது. அவசர அவரசமாக அவனை நான்காம் இடத்தில நிறுத்திவிட்டு அப்பா ஐந்தாவது இடத்தில..
குளிரில் உடல் சிறிது நடுங்க பாதி தூக்கத்தில் ராமர் சொல்ல ஆரம்பித்தான்.
"அய்யா! தர்மம் பண்ணுங்க! நல்லா இருக்கனும் நீங்க....அய்யா அம்மா!!! "
No comments:
Post a Comment