"திருநா எங்கே!" என்று கேட்டுகொண்டே மேனேஜர் உள்ளே நுழைய, திருநா என்கிற திருநாராயணன் மேனேஜர் அறையில் அன்று அவர் பார்க்க வேண்டிய கடன் வசூல் பைல்ஐ வைத்து கொண்டு இருந்தான். அயன்மேட்டில் உள்ள அந்த சிறிய வங்கியில் திருநா தான் எல்லாம். ஏழாம் வகுப்பு முடித்தவுடன் அவன் தந்தை இறக்க, அவரது வாட்ச்மன் உத்தியோகம் இவனுக்கு messenger உத்தியோகத்தை தந்தது.
"இன்னிக்கி மார்ச் 8, நாளைக்கி ஆடிடர் எல்லாம் மெட்ராஸ் ல இருந்து வராங்க ஆர் எஸ் சார்" என்று அவன் சொல்ல, "ஆமாண்டா, நான் மறந்துட்டேன். நீ போயி அந்த balance பைல்ஐ கொண்டு வா. கணக்குல ஏதோ tally ஆகாமா இருக்கு" என்று ஆர் எஸ் சொன்னார்.
மணி 9:30 ஐ தாண்ட, திருநா பரபரப்பாக சுழன்று கொண்டு இருந்தான். "சார், உங்களுக்கு மசால் வடை, சக்கரை போடாத காபி" என்று கூறிக்கொண்டே "அம்மா, இங்க உக்காருங்க. மேனேஜர் உள்ளே இருக்காரு. வீடு பத்திரம் எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்க இல்ல!" என்று லோன் கேட்டு மகனுடன் வந்து இருக்கும் அம்மாவை உக்கார சொன்னான்.
"திருநா!, ஸ்டேட் பேங்க் போயி இந்த DD எல்லாம் கொடுத்திட்டு வா"
"திருநா!, போஸ்ட் ஆபீஸ் போயிட்டு வரப்ப வசந்த பவன் ல ரெண்டு லஞ்ச் பொட்டலம் வாங்கி வந்திரு! கூடவே இந்த வார ஜூ வீ"" இப்படி எல்லோருக்கும் எப்போதும் திருநா தான் எல்லாம் அந்த வங்கியில்.
எத்தனை வேலை செய்தாலும், யார் எது சொன்னாலும் சிரிப்பு மட்டுமே அவனது பதிலாக இருக்கும். அவன் ஒரு நாள் வரவில்லை என்றாலும் வங்கியே ஸ்தம்பித்தது போல இருக்கும்.
கேஷியர் சோமசுந்தரம் அவனிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி "எப்படி திருநா நீ முகம் சுளிக்காம எல்லோருக்கும் வேலை செய்யற?" "கடமைய செய்யினு அப்பா அடிகடி சொல்லுவார் சார்" என்பான் சிரித்துகொண்டே.
மதியம் ரெண்டரை மணி இருக்கும். திருநா சைக்கிளை stand போட்டு விட்டு வங்கி உள்ளே நுழைய "திருநா! அந்த அம்மாவும் பையனும் ரொம்ப நேரம் உனக்காக காத்துகிட்டு இருக்காங்க" என்றார் காஸியர் சோமசுந்தரம். திருநா அருகே நெருங்க கண்ணீருடன் அவனுக்கு வணக்கம் சொன்னார் அந்த அம்மா. அந்த பையனும் பவ்யமாய் எழுந்து வணங்க "உன்னால் தாம்பா என் பையனுக்கு இன்னிக்கி மெட்ராஸ்ல நல்ல வேலை கெடச்சி இருக்கு" என்றார் மீண்டும் கண்ணீருடன்.
"இல்லை அம்மா! அதெல்லாம் ஒன்னும் இல்ல!" இது திருநா.
"இல்லப்பா, நீ மட்டும் அன்னிக்கி மேனேஜர் கிட்ட நெறைய பேசி சிபாரிசு பண்ணி இருகலேன்னா என்னை மாதிரி ஏழைக்கி எப்படி லோன் கெடச்சி இவன் இன்ஜினியரிங் பண்ணி இருக்க முடியும்" மீண்டும் கண்ணீர்.
கொண்டு வந்த ஸ்வீட் பாக்கெட்டை திருநாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் நன்றியுடன் அவர்கள் விடை பெற "திருநா 3 காபி 2 டீ" என்று ஆர்டர் வர மீண்டும் பரபரபானன் திருநா.
காலம் கடந்து கொண்டு இருந்தது. சைக்கிள், வீடு, வங்கி என திருநா உழன்று கொண்டு இருந்தான். "இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா. இப்பவே எனக்கு எதுக்கு பொண்ணு பாக்கற" என்று அம்மாவை அடிகடி மறுத்தான்.
அன்று புதன் கிழமை. அவன் வீடு அருகே ஒரே கூடம். "போஸ்ட் ஆபீஸ் போயிட்டு வர வழில இப்படி....ரோட சைக்கிள்ள கிராஸ் பன்றப்ப...." என திலகா மேடம் முனுமுக்க, திருநாவின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது. நெற்றியை சுற்றி
வெள்ளை துணி கட்டப்பட்டு இருந்த உடலை பார்த்தபடி அவன் அம்மா அழுது கொண்டு இருக்க, முகத்தை துரத்தும் ஈ ஐ அவன் தங்கை விரட்டி கொண்டு இருந்தாள்.
வங்கி ஊழியர்கள் எல்லோரும் கண்ணீருடனும், மௌனதுடனும் இருக்க "அந்த பையன் தினம் போற ரோடு தான். எப்படி இப்படி...." என்று முனுமுனுப்புகள் இருந்தன. "சார் எல்லாம் ரெடி" என சோமசுந்தரம் மேனேஜர் காதில் கூற திருநா என்கிற திருநாராயணன் உடல் அந்த ஆம்புலன்ஸ் ல் ஏற்றப்பட்டது. எல்லோரும் உள்ளே ஏற ரோசா இதழ்களுடன் வண்டி நகர காஷியர் சோமசுந்தரம் வண்டியின் உள்ளே மேலே பார்த்தார்.
"கடமையை செய், பலனை எதிர் பார்காதே" என்ற வாசகம் அச்சாய் எழுதப்பட்டு இருந்தது.
-Saveena
தல,
ReplyDeleteமிக அருமை. மேலும் எழுதி கலக்க வாழ்த்துக்கள்.
- முகுந்தராஜ்.
Good Job.
ReplyDeleteTry to write more. You have the flair. When you write in tamil make sure that the spellings are taken care.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நீதி போதனைக் கதைகளை தவிருங்கள்.இதெல்லாம் ரொம்ப பழசு.
ReplyDeleteகே.ரவிஷங்கர்.